இமானை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி....
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் ரஜினி 168 படத்தின் படப்பிடிப்பு பாடலுடன் தொடங்கியதாகவும், தான் இசையமைத்த பாடலைக் கேட்டு ரஜினி பாராட்டியதாகவும் இசையமைப்பாளர் டி. இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ரஜினியின் 168 வது படத்தை சிறுத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இன்று, இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங், அவர் இயற்றியுள்ள பாடலுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளதாவது :
’எளிமையான மனிதரான ரஜினியை சந்தித்தேன், முதல் நாள் சூட்டிங்கின் போது எனது பாடல் குறித்து அவர் என்னைப் பாராட்டினார்.அவரைச் சுற்றி ஒரு சுறுசுறுப்பு உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.