1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (21:05 IST)

சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங்... 'ஜெயிலர்' பட புதிய அப்டேட்

jeyiler
‘’ஜெயிலர்’’ பட முதல் சிங்கில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ள  நிலையில், 2 வது சிங்கில் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘’ஜெயிலர்’’. இப்படத்தில் அவருடன் இணைந்து தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் சிங்கில்  #Kaavaala சமீபத்தில்  ரிலீஸாகி  2  கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று டிரெண்டிங் ஆகி வருகிறது.

இப்பாடல் இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் கவர்ந்துள்ள நிலையில், இப்பாடலை இன்ஸ்டா ரீல்ஸில் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. சினிமா நட்சத்திரங்களும் இப்பாடலுக்கு வைப் செய்து டான்ஸ் ஆடி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சன்பிக்சர்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங்…. நாளை மாலை 6 மணிக்கு ‘’ஜெயிலர்’’ பட 2 வது சிங்கில்  பற்றிய அப்டேட்  வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.