வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 22 நவம்பர் 2018 (18:51 IST)

சூப்பர் ஹூரோயின் 'பேட்உமன்' டீசருக்கு பெரும் வரவேற்பு

ஹாலிவுட்டில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர்ஹீரோயின் கதாபாத்திரமான 'பேட்உமன்'  என்ற பெயரில் டிவி தொடரின் புரொமோ வெளியாகி உள்ளது.
 
ஹாலிவுட் திரையுலகில்  காமிக்ஸ் புத்தகங்களில் இருக்கும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான சூப்பர்ஹீரோ கேரக்டர் படங்கள் மற்றும் டிவி தொடர்கள் வெளியாகி வருகிறது.
 
அந்த வகையில் 'பேட்மேன்' என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த கற்பனையான கேரக்டரை வைத்து ஏராளமான படங்களும் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.
 
'பேட்மேன்'-ஐ தொடர்ந்து தற்போது 'பேட்உமன்' என சூப்பர்ஹீரோயின் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை படமாக இல்லாமல் டிவி தொடராக ஒளிபரப்பவுள்ளனர்.
 
இந்நிலையில், இதுதொடர்பான முதல் புரொமோ விடியோ காட்சியை 'சிடபில்யூ' டிவியில் 'அரோவ்' என்ற தொடருக்கு இடையே ஒளிபரப்பட்டுள்ளது. இதில் பேட்உமென்னாக ஹாலிவுட் நடிகை ரூபி ரோஸ் நடித்துள்ளார்.