1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (15:41 IST)

'கோப்ரா''வில் சூப்பர் நடிப்பு..விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்குமா?

நடிகர் விக்ரம். இவர் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீ  நிதி ஷெட்டி நடித்துள்ளார்.
 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வில்லனான கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்ததுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இப்படம்  இன்று (  31 ஆம் தேதி)  உலகம் முழுவதும் ரிலீஸானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  ஸ்டைலாகவும், த்ரிலிங்காகவும் உள்ள இப்படம்  வசூல் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்பட்த்தில் பல கெட்டப்களில் நடித்துள்ள விக்ரம் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளதாகவும், இப்படத்திற்கும் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள விக்ரமுக்கும் தேசிய விருது கிடைக்கும் என சினிமா விமர்சகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

சேது, பிதாமகன் படத்திற்குப் பின் விக்ரன் தேசிய விருது பெறவில்லை. எனவே வித்தியாசமான  நடிப்பால் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ள விக்ரமுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.