செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (14:28 IST)

கோப்ரா படத்தின் டிரைலரை பாராட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்!

சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தின் டிரைலர் இணையத்தில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விக்ரம் நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நடிகர் விக்ரம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் நேற்று மாலை கோப்ரா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியானது.

இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீது இந்திய அளவில் கவனம்  விழுந்துள்ளது. இந்நிலையில் டிரைலரைப் பகிர்ந்துள்ள இந்திய முன்னாள் வீரரும் சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விதமாக டிரைலர் இருப்பதாகக் கூறியுள்ளார்.