செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:49 IST)

சன்னி லியோன் ஆக்ஸிடண்ட்! - வைரலாகும் வீடியோ!

இந்திய இளைஞர்களையும் தாண்டி உலகம் முழுவதும் உள்ளவர்களை எல்லையற்ற கவர்ச்சியின் மூலம் கவர்ந்திழுப்பவர் நடிகை சன்னி லியோன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்த சன்னி லியோனி தன் கவர்ச்சியான உடல் அழகினால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கிறங்கடிக்க செய்தார்.


 
பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் நடிகர் ஜெய் நடித்த 'வடகறி' என்ற படத்திலும்  ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் .
 
தற்போது 'வீரம்மா தேவி' என்ற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் 5 முக்கிய இந்திய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இதனை இயக்குனர் வடிவுடையான் இயக்குகிறார். 
 
இந்நிலையில், தற்போது இவர் ஆட்டம் போட்டிருக்கும் 'லவ்லி ஆக்ஸிடென்ட்' என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கும் அந்த வீடியோ பல்லாயிரம் லைக்குகளைக் குவித்து வருகிறது.