புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (08:06 IST)

தமிழ் சினிமாவில் களமிறங்கியிருக்கும் சன்னி லியோனின் தங்கை

சன்னி லியோனின் தங்கை மியா ராய் லியோன் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
கனடாவில் பிறந்து, அமெரிக்காவில் நீலப்பட நடிகையாக நடித்து, அதன் பின் இந்தியாவின் பாலிவுட் சினிமாவில் நுழைந்தவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.
 
பல்வேறு கவர்ச்சி படங்களில் நடித்து இந்திய ரசிகர்களை கிறங்கடித்தவர் சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். இது மட்டுமல்லாமல் தனது வாழ்க்கை சுயசரிதை படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது தங்கையான மியா ராய் லியோன் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் 7 ந் தேதி ரிலீசாக இருக்கிறது.