திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (00:23 IST)

அடுத்த பிக்பாஸில் சன்னிலியோன்? புதிய தகவல்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்த வார இறுதியில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் பிக்பாஸ் தமிழ் IIஐ ஒரு சிறிய இடைவெளியில் தொடங்க விஜய் டிவி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 
 
இந்த நிலையில் இந்தி பிக்பாஸ் 10 தொடர்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு அதிவிரைவில் 11வது தொடரை ஆரம்பிக்கவுள்ளது. 11வது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மற்றும் அவரது கணவர் இருவரும் கலந்து கொள்ளவிருப்பதாக ஒரு  வதந்தி பரவி வருகிறது
 
இந்த நிலையில் சன்னிலியோன் இந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். 11வது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தானும், தன்னுடைய கணவரும் கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி தவறானது என்றும், ஆனால் தங்களுடைய நெருங்கிய நண்பர் விகாஸ் குப்தா கலந்து கொள்வது உறுதியாகியுள்ளதாகவும், அவர் இந்த நிகழ்ச்சியில் அவ்ர் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.