சன்னி லியோன் பாடலுக்கு கலக்கல் நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர் (வீடியோ)


Abimukatheesh| Last Updated: புதன், 19 ஜூலை 2017 (17:34 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பாடல் ஒன்றுக்கு கலக்கல் நடனம் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 

 
அதிரடி மன்னன் என்ற அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாலிவுட் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் ஆடிய லைலா மே லைலா என்ற பாடலுக்கு கலக்கான நடனம் ஆடியுள்ளார். மேலும் அந்த வீடியோவை பதிவிட்டு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளார். 
 
அதாவது பெண்களே உங்களுக்காக ஒரு சவால். இந்த பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி பதிவு செய்யுங்கள். சிறந்த நடனத்தை வெளிப்படுத்தும் 5 பேரின் வீடியோவை எனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது கிறிஸ் கெய்ல் நடனம் ஆடிய வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

நன்றி: Eenadu Tamil


இதில் மேலும் படிக்கவும் :