1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (14:08 IST)

19 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த யுவன் – சுந்தர் சி கூட்டணி… ‘காஃபி வித் காதல்’ படத்தின் செம்ம அப்டேட்!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து ரிலீஸாக உள்ள திரைப்படமாக காஃபி வித் காதல் உருவாகி வருகிறது.

நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நிறைவுற்றது. இந்த படத்துக்கு ‘காஃபி வித் காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது. வின்னர் படத்துக்கு பின்னர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா – சுந்தர் சி கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.