வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:29 IST)

சுந்தர் சி ரசித்து எடுத்த க்ளைமேக்ஸ்… 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகாத சோகம்!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் மத கஜ ராஜா.

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. விஷாலும் போராடிப் பார்த்து ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அந்த படத்தை கைவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சுந்தர் சி அளித்த ஒரு நேர்காணலில் ‘மத கஜ ராஜா படத்தின் கடைசி 20 நிமிட நகைச்சுவைக் காட்சிகளை நான் ரசித்து படமாக்கினேன். அந்த படம் ரிலிஸ் ஆகாதது வருத்தமான விஷயம். விரைவில் ரிலிஸ் ஆகும் என்று நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.