வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (15:51 IST)

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?.. கமர்ஷியல் ஸ்பெஷலிஸ்ட்டை தூக்கப் பாக்கும் வேல்ஸ் நிறுவனம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாசானி அம்மன் என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கவில்லை என சொல்லப்பட்டது.

இதற்கிடையில் பாலாஜிக்கு போட்டியாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் இயக்குனர் உள்ளிட்ட யார் பெயரும் இடம்பெறவில்லை. இந்நிலையில் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி-யை இந்த படத்தை இயக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.