1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:00 IST)

நடிகராக அறிமுகமாகும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணனான சத்ய நாராயணா சில ஆண்டுகள் ரஜினி ரசிகர் மன்றத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்தார். அதனால் அவர் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அண்னன் மேல் ரஜினிகாந்த் மட்டற்ற அன்பு வைத்திருந்ததால் தான் எடுக்கும் முடிவுகள் குறித்து அவரிடம் ஆலோசனைக் கேட்பார் என சொல்லப்பட்டது.

அதனால் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அவரிடம் ஊடகங்கள் கேள்வி கேட்டு அவரை மேலும் பிரபலம் ஆக்கினர். இதனால் அவரை நடிக்க வைக்க வேண்டும் என சில இயக்குனர்கள் அவரை அணுகியதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அவர் மாம்பழ திருடி என்ற படத்தில் நடிகராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் ஏ ஆர் ரசீம் “முதலில் இந்த படத்தில் நடிக்க அவர் மறுத்தார். ஆனால் நான் கதையைக் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் என்று சொன்னேன். கதையைக் கேட்டு அவர் நடிக்க சம்மதித்தார். சூப்பர் ஸ்டாரின் அண்ணன் என் படத்தில் நடிப்பது கடவுள் கொடுத்த வரம்தான்” எனப் பேசியுள்ளார்.