அரண்மனை 4 ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுகிறதா? விஷாலின் ரத்னம் சோலோ ரிலீஸ்!
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது மே 3 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடக்குமாயின் ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடிப்பில் ஹரி இயக்கியுள்ள ரத்னம் திரைப்படம் சோலாவாக ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.