திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:55 IST)

இப்ப வர்ற படங்களில் காமெடி சிரிக்கும்படி இல்லையே… பத்திரிக்கையாளர் கேள்விக்கு யோகி பாபு மழுப்பல் பதில்!

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்மனை வரிசையின் மூன்று பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இப்போது சுந்தர் சி லைகா தயாரிப்பில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தொடங்கி ஷூட்டிங்கை முடித்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பின்னர் சுந்தர் சி யே கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்டு யோகி பாபுவிடம் “சுந்தர் சி படங்களில் விழுந்து விழுந்து சிரிக்கும்படியான நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும். ஆனால் இப்போது வரும் படங்களில் எல்லாம் நகைச்சுவை ரசிக்கும்படி இல்லையே” என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த யோகி பாபு “கவுண்டமணி சார் நடிக்கும்போதெல்லாம் ‘டேய் கோமுட்டி தலையா’ என்பது போல பல வார்த்தைகளைப் பயன்படுத்துவார். ஆனால் இப்போது டேய் என்று சொன்னாலே சென்சாரில் தடை வருகிறது. இது சம்மந்தமாக நீங்கள் சென்சாரில் பேசி பிரச்சனையை தீர்த்துவிட்டு பின்னர் வந்து கேளுங்கள்” என்பது போல பேசியுள்ளார்.