புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (08:27 IST)

'தளபதி 65’ படத்தில் இருந்து திடீரென விலகிய சன் பிக்சர்ஸ்? புதிய தயாரிப்பாளர் யார்?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பின் திரை அரங்குகள் திறந்த பின் ரிலீசாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ஏஆர் முருகதாஸ் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’தளபதி 65’ படத்திலிருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் நேரத்தில் அதிக பட்ஜெட் படத்தை தயாரிப்பது ரிஸ்க் என்றும் இதனால் விஜய்யிடம் சம்பளத்தை குறைக்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் விஜய் தரப்பில் சம்பளத்தை குறைக்க முடியாது என்ற என்று உறுதியாக இருந்ததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை கை விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து இந்த படத்தை மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தளபதி விஜய்யின் 66வது படத்தை தயாரிக்க ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருந்தது என்பதும், தற்போது அந்த வாய்ப்பு முன்னதாகவே அந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது