செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (16:03 IST)

மிர்ச்சி சிவாவின் சுமோ ஓடிடியில் ரிலீஸ்! பேச்சுவார்த்தை தொடங்கிய விடிவி கணேஷ்!

மிர்ச்சி சிவா மற்றும் ஜப்பானிய கலைஞர் ஒருவர் நடித்துள்ள சுமோ திரைப்படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி காமெடி கலந்த செண்டிமெண்ட்  படமாக உருவாகியிருக்கும் " சுமோ " என்ற படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். "வணக்கம் சென்னை" படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார். 

இப்படத்திற்கு நடிகர் சிவாவே திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை முதலில் விடிவி கணேஷ் தயாரிக்க ஆரம்பித்தார். பின்னர் அந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றி முடித்தது. நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் இப்போது அந்த படத்தை மீண்டும் விடிவி கணேஷே கைப்பற்றி வெளியிட உள்ளாராம்.

ஆனால் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். விரைவில் அந்த படம் ஏதாவது ஒரு ஓடிடியில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.