படத்தை விட விமர்சனங்களில் அதிக வன்முறை இருக்கிறது… சுல்தான் எடிட்டர் ஆதங்கம்!
சுல்தான் படத்தின் எடிட்டர் ரூபன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது பழைய தேய்ந்து போன திரைக்கதை உத்தி. இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய எடிட்டர் ரூபன் படத்தில் அதிகமாக வன்முறை இருக்கின்றது என்று சென்ஸார் அதிகாரிகள், வன்முறைக் காட்சிகளைக் குறைக்க சொன்னார்கள். ஆனால் படம் ரிலீஸான பின்னர்தான் விமர்சனம் என்ற பெயரில் அதிக வன்முறைகள் வெளியாகின. சில விமர்சனங்கள் ரொம்பவே காயப்படுத்துகின்றன.
எனக்கு என் அம்மாவை எந்தளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு சினிமாவையும் பிடிக்கும். அம்மா அளவுக்கு சினிமாவும் நன்றாக இருக்கவேண்டும் என நினைப்பேன். வார்த்தைகளில் வன்மத்தைக் குறையுங்கள். ரொம்ப எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் அடியுங்கள். ஆனால், கையைக் கழுவிவிட்டு அடியுங்கள் என்றுதான் சொல்கிறேன்". எனக் கூறியுள்ளார்.