வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (11:21 IST)

நடிகர் சுதா சந்திரனின் செயற்கைக்காளை சோதித்த விவகாரம்! மன்னிப்பு கேட்ட சிஐஎஸ்எஃப்!

நடிகையும் நடனக் கலைஞருமான சுதா சந்திரன் விபத்து ஒன்றின் காரணமாக தனது காலை இழந்து செயற்கைக் காள் பொருத்தி வாழ்ந்து வருகிறார்.

தனது செயற்கைக் காலுடனேயே அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வருகிறார். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஒவ்வொரு முறை இந்தியா திரும்பும்போதும் விமான நிலையத்தில் அவரின் செயற்கைக் காலை சோதனை என்ற பெயரில் கழட்ட சொல்லி தன்னை அவமானப் படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘நான் என்னுடைய செயற்கைக் காலோடு வெளிநாடுகளில் நடனமாடி நாட்டைப் பெருமைப் படுத்துகிறேன். ஆனால் விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் என் செயற்கைக் காலை சோதனை என்ற பெயரில் கழட்ட சொல்லி என்னை அவமானப்படுத்துவது மட்டுமில்லாமல், வலிக்கும் வேதனைக்கும் என்னை ஆளாக்குகின்றனர். வயதானவர்களுக்கு ஒரு அட்டை கொடுப்பதை போல எங்களைப் போன்றவர்களுக்கும் ஒரு அட்டைக் கொடுங்கள். மத்திய மாநில அரசுகளுக்கு எனது கவலை சென்று சேரும் என நினைக்கிறேன்’ எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ பரவலாக பரவியதை அடுத்து சிஐஎஸ்எப் சுதா சந்திரனிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.