வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (17:01 IST)

ரூ.59 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.59 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை இந்திய சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அவர்களிடம் இருந்து ரூ. 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் றிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஒரு பயணியின் உடைமையில் பேஸ்ட் வடிவத்தில் இருந்த தங்கத்தின் எடை 555.00 கிராம் என தெரிய வந்துள்ளது. சந்தையில் இதன் மதிப்பு ரூ. 26.29 லட்சம் ஆகும்.
 
அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடமிருந்து 697.500 கிராம் எடையுள்ள ரூ. 33.04 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 59 லட்சம் ஆகும். இந்த கடத்தல் தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், கண்ணன் ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.