வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (08:36 IST)

மறைந்த பின்னரும் மற்றவர்களுக்கு உதவி.. டேனியல் பாலாஜி கண்கள் தானம்..!

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது திரையுலகினர்களை பெறும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் உள்பட பல திரைப்படங்களில் வில்லன் படத்தில் நடித்த டேனியல் பாலாஜி நேற்று இரவு திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவர் தனது கண்களை தானம் செய்ய ஏற்கனவே விண்ணப்பம் அளித்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பே டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்திருந்த நிலையில் தற்போது புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மருத்துவர்கள் கண்களை எடுத்துச் சென்றதாகவும் அந்த கண்கள் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
வில்லன் நடிகராக இருந்தாலும் தான் உயிரிழந்தாலும், தனது கண்கள் யாருக்காவது பயன்பட வேண்டும் என்று நல்ல நோக்கத்தால் கண்களை தானம் செய்துள்ள அவருக்கு மறைவுக்குப் பின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் உள்ள டேனியல் பாலாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட வரிசையில் மக்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்
 
டேனியல் பாலாஜி, கண் தானம்,மறைந்த பின்னரும் மற்றவர்களுக்கு உதவி.. டேனியல் பாலாஜி கண்கள் தானம்..!
 
Edited by Mahendran