1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (17:32 IST)

10 வருடத்துக்கு முன்பே மங்காத்தா 2 கதை ரெடி – வெங்கட் பிரபுவின் நண்பர் பதில்!

மங்காத்தா 2 படத்தின் கதையை வெங்கட் பிரபு எழுதிவிட்டதாக அவருடைய நண்பரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகனுமான சுப்பு பஞ்சு தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு சென்னை 28 ,சரோஜா, கோவா எனத் தனது நண்பர்களை வைத்து மல்டிஸ்டார் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்து அதில் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்தான் மங்காத்தா. ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் ஜானர்களில் ஒன்றான  பாய்ஸ்  ஒன்லி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பைக் கண்டு ரசிகள்கள் குறிப்பாக இளைஞர்கள் புல்லரித்து சில்லறையை சிதற விட்டனர்.

இதனால் இந்த படத்தின் பார்ட் 2 எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாகக் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவரும், வெங்கட் பிரபுவின் நண்பருமான சுப்பு பஞ்சு ஒரு நேர்காணலில் இந்த கேள்விக்கு பதிலளித்தார். அதில் 10 ஆண்டுகளுக்கு முன்பே பார்ட் 2 கதையை வெங்கட் பிரபு எழுதிவிட்டார். அஜித் எப்போது ஓகே சொல்கிறாரோ அப்போது ஷூட்டிங் தொடங்கிவிடலாம் என சொல்லியுள்ளார்.