வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:36 IST)

அஜித் பட இயக்குனர் மகன் திருமணம்: நேரில் வாழ்த்து தெரிவித்த திரையுலகினர்

அஜித் பட இயக்குனர் மகன் திருமணம்
அஜித் நடித்த முதல் படமான அமராவதி என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் என்பவரின் திருமணம் சிறப்பாக நடைபெற்றதை அடுத்து கோலிவுட் திரையுலகினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர் 
 
அஜித்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய அமராவதி என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. இவர் ஆசையில் ஒரு கடிதம், பூவேலி, நான் அவனில்லை உள்பட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தற்போது அரவிந்தசாமி சிம்ரன் நடித்த வணங்காமுடி என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு தற்போது டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் மற்றும் மீரா திருமணம் விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்
 
இன்று முதல் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு உள்ளதால் திரையுலகினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் மணமக்களை நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இயக்குனர் செல்வாவின் மாப்பிள்ளை ராஜீவ் ஒரு எஞ்சினியர் என்பதும் மணப்பெண் மீராவும் ஒரு இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது