செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (22:48 IST)

வலிமை பட 2 வது பாடல் நாளை ரிலீஸ்?

மிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நிறைவடைந்த நிலையில், நடிகர் அஜித்குமார் சொகுசு பைக்கில் பயணம்

கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படத்தின்  2 வது சிங்கில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஃபர்ஸ்ட் சிங்கில் வைரலான நிலையில், 2 வது சிங்கிலுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இணையதளத்தில் #ValimaiSecondSingle என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.