செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (20:40 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா அபிஷேக்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அபிஷேக் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்தது. அதில் பிரியங்கா, பவானி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி மற்றும் இசைவாணி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று விட்டதாகவும் ஐக்கி பெர்ரி, அபிநய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய நால்வரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
நாமினேஷனில் உள்ள ஒன்பது பேர்களில் அபிஷேக் தான் மிக குறைவாக வாக்குகள் பெற்று இருப்பதாகவும் எனவே அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிக்பாஸ் நிர்வாகம் மற்றும் விஜய் டிவி என்ன முடிவெடுத்து இருக்கிறதோ அவர்தான் இந்த வாரம் வெளியேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது