செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (21:46 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விருது!

சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் விழா  வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், சூப்பர் ஸ்டார்  ரஜினிக்கு விருது வழங்கப்படவுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படும். இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் வழங்கும்.

இந்த ஆண்டிற்கான திரைப்பட விழா வரும் 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.  இந்த விழாவில் சினிமாவில் மிக உயர்ந்த விருதான  தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

தமிழ்  சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம்  ஆகிய மொழிகளில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதற்காக 51 வது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.