திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (16:15 IST)

நாயை பற்றி கவலைப்படுவோர், மனிதர்களை பற்றியும் கவலைப்படுங்கள்: நடிகை அம்முவுக்கு ரோகிணி பதிலடி..!

நாயை பற்றி கவலைப்படுவோர், மனிதர்களை பற்றியும் கவலைப்படுங்கள்: நடிகை அம்முவுக்கு ரோகிணி பதிலடி..!
டெல்லியில் உள்ள தெருநாய்களை பராமரிப்பு மையங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் நடிகை அம்மு, தெருநாய் பிரச்சனை குறித்துப் பேசும்போது, "ஒரு நாய் குழந்தையை கடிக்கும் வரை பெற்றோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நாயை கண்டால் சாதாரண மனிதர்கள் விரட்டுவார்கள். ஆனால், குழந்தை கதறும்போது ஏன் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை? ஒரு குழந்தை நாயால் கடிக்கப்பட்டு கதறும்போது, அதை பார்த்து கொண்டு சும்மா இருந்தார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், எட்டு மணிநேரம் நடைபெற்ற விவாதத்தில், தங்கள் தரப்பு கருத்துக்கள் பல வெட்டப்பட்டு வெறும் 45 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டதாகவும், தங்களை பேச அனுமதிக்கவில்லை என்றும் அம்மு குற்றம் சாட்டினார்.
 
நடிகை அம்முவின் கருத்துக்கு நடிகை ரோகிணி கொடுத்த பதிலடியில் "இப்போது நிறைய பேர் நாய்களின் உயிரை பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் மனித உயிர்களை பற்றியும் கவலைப்படுங்கள் என்று நாங்கள் காலங்காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்" என்று விமர்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva