வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 அக்டோபர் 2018 (16:38 IST)

இன்ஸ்டாகிராமில் ஆட்டம் போட்ட யாஷிகா, ஐஸ்வர்யா

பிக்பாஸில் கலந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக மாறிய யாஷிகா ஆனத்தும் ஐஸ்வர்யா தத்தாவும் தற்போது பாடிக்கொண்டே ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 2 இந்தவருடம் 105 நாட்கள் ஒளிப்பரப்பானது. சென்ற வருடத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்புக் குறைவாகவே இருந்தது. கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்கள் யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யாவும் தான். சென்ற ஆண்டு காயத்ரி சக்தி நட்பைப் போல இந்த ஆண்டு இவர்கள் நட்பு பெரிதும் பேசப்பட்டது.

தற்போது பிக்பாஸ் முடிந்து அனைவரும் வெளியுலக வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளிவந்த பிரபலங்கள் தங்கள் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்து தங்களது பிக்பாஸ் வீட்டு நட்பைப் புதுப்பித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸில் நெருங்கிய தோழிகளாக உலா வந்த யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் தங்கள் நட்பின் அடையாளமாக பாட்டு ஒன்றைப் பாடி நடனம் ஆடி அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

’நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு’ எனத் தொடங்கும் அந்த பாடலை அவர்கள் இரண்டு பேருமே சேர்ந்து எழுதியுள்ளனர். இந்த பாட்டோடு சேர்ந்த அவர்கள் நடனம் தற்போது இன்ஸ்டாகிராம் வைரல் ஆகியுள்ளது.