’மாநாடு’ சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல்!
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மாநாடு படத்தின் புரமோஷன் பணிகளை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தொடங்கிவிட்டார். இதனை அடுத்து இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அனேகமாக இந்த பாடல் வரும் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே ரம்ஜான் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அந்த தேதியில் தற்போது சிங்கிள் பாடலை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.