செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (15:36 IST)

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறேனா? விஷால் பட நடிகை பதில்!

தமிழில் பிக்பாஸ் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். தொலைக்காட்சியிலும் நல்ல ஹிட் ஆன நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதையடுத்து அடுத்த சீசன் விரைவில் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீசனில் டப்ஸ்மாஷ் புகழ் நடிகை மிருனாளினி ரவி செல்ல உள்ளார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்த மிருனாளினி ‘முதல் சீசனிலேயே என்னைக் கூப்பிட்டார்கள். ஆனால் நான் போகமாட்டேன். ஆனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும்’ எனக் கூறியுள்ளார்.