கனி வீட்டுக்கு சென்று காரக்குழம்பு ருசித்த சிம்பு-மகத்!
கனி வீட்டுக்கு சென்று காரக்குழம்பு ருசித்த சிம்பு-மகத்!
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனியின் வீட்டிற்கு சென்ற சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகியோர் கனி வைத்த காரக்குழம்பை சாப்பிட்டு ருசித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி என்பதும், கிராண்ட் பினானே நிகழ்ச்சியின்போது சிம்பு கலந்து கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே. அப்போது கனியிடம் நீங்கள் வைத்த காரக்குழம்பை ஒருநாள் நான் சாப்பிட வேண்டும் எனக்கு சமைத்து தருவீர்களா? என்று சிம்பு கேட்ட போது கண்டிப்பாக எங்களது வீட்டுக்கு வாருங்கள் சமைத்து தருகிறேன் என்று கனி கூறினார்
அந்த வகையில் சிம்பு தற்போது திடீரென தனது நண்பர் மகத் மற்றும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷனுடன் சேர்ந்து கனியும் வீட்டுக்கு சென்று உள்ளார். அவரை வரவேற்ற கனியின் குடும்பத்தினர் அவர்களுக்கு காரக்குழம்புடன் சாப்பாடு பரிமாறியுள்ளனர். இந்த சாப்பாட்டை ருசித்து சாப்பிட்ட சிம்பு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது