உனக்கு மனசாட்சி இருக்கா? கோலமாவு கோகிலா ஒரு நிமிடக் காட்சி
கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோலமாவு கோகிலா' (கோகோ). இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார்.
காமெடியை பிரதானமாக கொண்டு உருவாகியிருக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாரா கோகிலா என்ற கதாபாத்திரத்தில் வேலைக்கார பெண்ணாக நடித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசைமைத்து யூடியுப்பில் வெளியான கல்யாண வயசு பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
நடிகை சரண்யா நயன்தாரவின் தாயாகவும், விஜய் டிவி புகழ் ஜாக்லின் தங்கையாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாரபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஒரு நிமிட ஸ்நீக் பீக் காட்சி வெளியாகி கோலமாவு கோகிலா படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.