ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:17 IST)

கிச்சா சுதீப், சேரன் இணையும் படம் என்ன ஆனது?

தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து அவர் சமீபத்தில் ’ஜர்னி’ என்ற வெப் தொடரை இயக்கி வெளியிட்டார். சேரன் இயக்கும் இந்த தொடரில் ஆரி, சரத்குமார், பிரசன்னா, கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனி லிவ் நிறுவனம் தயாரித்த இந்த வெப் தொடர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து அவர் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அதன் பிறகு அந்த படத்தின் அடுத்த கட்ட முன்னேற்றம் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் படத்தைக் கிச்சா சுதீப்புக்கு ஏற்றவாறு கமர்ஷியல் ஆக்கிக் கொண்டிருக்கிறாராம் சேரன். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.