திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (08:15 IST)

சீக்கிரமே குவா குவா சத்தம்... நகுல் மனைவிக்கு வீட்டிலே சீமந்தம்!

நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானனார். அதையடுத்து சுனைனாவுடன் சேர்ந்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா டாட் காம், செய், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வருகிறார். அந்தவகையில் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த லாக் டவுனில் அவ்வப்போது தனது மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நகுல் அன்றைய தினத்தில் தான் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதிக்கு வீட்டில் இருந்தபடியே வளைகாப்பு நடத்திய புகைப்படங்ககளை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நகுல் "  "எனது குடும்பத்தினர் வீட்டிலேயே சிறிய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நாங்களும் எங்கள் வீட்டு நாய்க்களும், பூனைகளும் மட்டும் கலந்துகொண்ட ஒரு மகிழ்ச்சியான தருணம் " என்று மிகுந்த சந்தோஷத்துடன் பதிவிட்டுள்ளார்.