டார்ச்சர் செய்த நகுல் கடுப்பாகி கடித்து குதறிய நாய் - வீடியோ!

Papiksha Joseph| Last Updated: புதன், 15 ஏப்ரல் 2020 (13:12 IST)

நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானனார். அதையடுத்து சுனைனாவுடன் சேர்ந்து காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா டாட் காம், செய், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வருகிறார். அந்தவகையில் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் அவ்வப்போது தனது மனைவியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தன வீட்டு நாயுடன் செல்ல சண்டை போட்டு, நாய் போன்று குறைத்து அதை கடுப்பேற்றியதால் கையில் கடித்துவிட்டது. அதையடுத்து தன் செல்ல நாய் குட்டியை கட்டியணைத்து சமாதானம் செய்கிறார். நாயுடன் நகுல் விளையாடிய இந்த கியூட் வீடியோ அனைவரையும் ஈர்த்து வருகிறது.


It’s more important for #oola to remove all the disturbance for mommy @srubee when she’s watching tvஇதில் மேலும் படிக்கவும் :