திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (08:35 IST)

ஹன்சிகாவுக்கு வில்லனாகும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

தமிழ் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்ட ஹன்சிகா, தற்போது ’மகா’ என்ற படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் மீண்டும் ஒரு திகில், காமெடி படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யோகிபாபு நடித்த ’தர்ம பிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹரி ஹரிஸ் என்று இயக்குனர் இயக்கவுள்ளார்.
 
பேய், காமெடி, திகில் மற்றும் குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் அமைந்துள்ள இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்க உள்ளதாகவும், இந்த படம் ஸ்ரீகாந்துக்கு தமிழில் ஒரு சிறப்பான எண்ட்ரியாக இருக்கும் என்றும் அவருடைய கேரக்டர் மிகவும் கொடூரமாக அமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் இருந்து அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்தப் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹன்சிகா மட்டும் ஸ்ரீசாந்த் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது