1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (15:50 IST)

என்னாது...அவருக்கு ஜோடி நானா...? ஷாக்காகி ட்விட் போட்ட ஹன்சிகா!

சென்னையில் உள்ள பிரபல கடைகளில் ஒன்றாக சரவணா ஸ்டோர் பல வருடங்களாக இயங்கி வருகிறது. தொழிலில் தொடர் வளர்ச்சியை கண்டு அடுத்தது பல இடங்களில் பல்வேறு கிளைகள் உருவாகிவிட்டது. இதில் முக்கியமான ஒன்று தான் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர். இதன் உரிமையாளரான 'சரவணன் அருள்' குறுகிய காலத்தில் நடிகர்களுக்கு நிகராக ஃபேமஸ் ஆகிவிட்டார். 


 
தன்னுடைய கடை விளம்பரத்திற்கு தானே நடிப்பதெல்லாம் எந்த உரிமையாளரும் யோசித்துக்கூட பார்க்க மாட்டார்கள் . அதிலும் ஹன்சிகா, தமன்னா என பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு விளம்பர பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். அது சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவி ட்ரோல் செய்யப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து தொடர்ந்து தன் கடை விளம்பரங்களில் தானே நடித்து வந்தார் சரவணன் அருள். 
 
இதற்கிடையில்  சினிமா துறையில் நடிகர் சங்கம் நடத்திய விழா ஒன்றில் சரவணன் அருள் கலந்து கொண்டார். அதில் கலந்துகொண்டதால் என்னவோ அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்கில் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவியது.  தற்போது அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விளம்பரத்தில் நடித்த போதே அந்த ஒட்டு ஒட்டினாங்க வேணாம் அண்ணாச்சி.. என யாராவது அட்வைஸ் செய்தாலும்....என்னவேனாலும் நடக்கட்டும் படத்தில் நடித்தே தீருவேன். அத்தனையும் எதிர்கொள்ள நான் தயார் என கூறி வருகிறாராம். 


 
இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் கடந்த சில நாட்களாக வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தனது ட்விட்டரில் இது வெறும் வதந்தி என கூறி அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் ஹன்சிகா