திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (15:26 IST)

பிரபல பெண் இயக்குனர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஸ்ரீரெட்டி

பிரபல நடன இயக்குனர் சரோஜ்கான், நடிகைகள் சம்மதத்துடன் தான் படுக்கைக்கு அழைக்கும் சம்பவம் நடக்கிறது என்று கூறினார். இதற்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 
நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கை அழைப்பது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடன இயக்குனர் சரோஜ்கான், பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது புதிய விஷயம் இல்லை என்று கூறியுள்ளார்.
 
“பாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடன் பாலியல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மற்ற துறைகளில் ஒரு பெண்ணை பயன்படுத்துவிட்டு கைவிட்டு விடுவார்கள். ஆனால், பாலிவுட்டில் பெண்களை படுக்கையில் பயன்படுத்தினாலும் அவர்களை அப்படியே விட்டு விடாமல் வாய்ப்பு கொடுக்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.
 
இந்த கருத்துக்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்து கூறியதாவது;- 
 
சரோஜ்கான் வெளியிட்ட கருத்தின் மூலம் நான் அவர் மீது வைத்திருந்த மரியாதையை இழந்து விட்டேன். அவர் திரையுலகில் மூத்தவர், மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து வழிநடத்த வேண்டும். அதை விடுத்து நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக நடக்கிறது என்றும், அது தவறு இல்லை என்றும் கூறுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என கூறினார்.