1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (15:59 IST)

ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய நானி!

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் நானி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று கூறி ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் பிரபல இயக்குனர் சேகர் கம்முழு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டினார். மேலும்,  தெலுங்கு திரை அலுவலகம் முன்பு ஆடைகளை கழற்றி அரை நீர்வாண போராட்டம் நடத்தினார்.
 
இந்த நிலையில் தற்போது அவர் நடிகர் நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். நடிகர் நானி தமிழில் வெப்பம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.