1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (15:50 IST)

சர்ச்சை நடிகைக்கு வாய்ப்பு தர முன்வந்த பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு தர இருக்கிறார்.

 
 
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது குற்றம்சாட்டினார். தெலுங்கு திரை அலுவலகம் முன்பு ஆடைகளை கழற்றி அரை நீர்வாண போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு நடிக்க தடை விதித்தது. ஸ்ரீரெட்டிக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 20 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. மேலும், அவர் மீதான தடையை நீக்குவதாக தெலுங்கு நடிகர் சங்கம் அறிவித்தது. அதன் பின்னர் அவர் இதுவரை எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
 
இந்நிலையில், ஸ்ரீரெட்டியை பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.