ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (20:05 IST)

’த்ரிஷாவை போல் நானும் வீடியோ வெளியிட்டால் என்ன??”.. சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி

நடிகை த்ரிஷா குளியல் வீடியோ வெளிவந்த பின் தான் மிகவும் பிரபலமடைந்தார்” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி, சினிமாவில் வாய்ப்புத் தருவதாக கூறி தன்னை பாலியல் தொல்லை கொடுத்தார்கள் என அரைநிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பியவர். இதனையடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷால், ஸ்ரீகாந்து உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் பல கொச்சை வார்த்தைகளாலும் வசைபாடிவந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், த்ரிஷாவை குறித்து ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், “த்ரிஷாவின் குளியல் வீடியோ வெளியான பின்பு தான் அவர் பிரபலமானார். அதே போல் நானும் கொஞ்சம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டால் என்ன?? த்ரிஷாவிடம் ஒன்றுமே இல்லை. ஆனால் நான் மிகவும் “ஹாட்” என பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.