செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (14:55 IST)

“முதல் நாள் எனர்ஜி இன்னும் அப்படியே இருக்கு”… KGF நிலவரம் குறித்து SR பிரபு Tweet!

கே ஜி எப் 2 திரைப்படம் தமிழகத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நிலையில் நான்காவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது. தென்னிந்தியாவுக்கு நிகராக இந்த படம் வட இந்தியாவில் வசூல் சாதனைப் படைத்தது.

இந்நிலையில் தற்போது இந்தியில் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் டங்கல் படத்தின் வசூலை கேஜிஎஃப் 2 தாண்டி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளியாகி நான்காவது வாரத்திலும் இந்த படம் வசூலில் அடிவாங்காமல் சென்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கேஜிஎஃப் 2 முன்பாக பாகுபலி 2 திரைப்படம் மட்டுமே இந்தியில் அதிக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் குறித்து தமிழ்நாடு விநியோகஸ்தர் எஸ் ஆர் பிரபு “முதல் நாள் கிடைத்த எனர்ஜி இன்னும் அப்படியே உள்ளது. நான்காவது வாரத்தில் 350 திரைகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை இழந்துவிடாதீர்கள்” என டிவீர் செய்துள்ளார்.