புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (10:33 IST)

இந்தியில் டங்கல் பட வசூலை முந்திய கே ஜி எஃப் 2… வெற்றிகரமான நான்காவது வாரம்!

கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்தியில் டங்கல் பட வசூலை முந்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியில் பாக்ஸ் ஆஃபீஸ் புள்ளிவிவரங்களை வெளியிடும் தாரன் ஆதர்ஷ் என்பவர் இதுவரை கேஜிஎஃப் 2 348 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதை கேஜிஎஃப் 2 தயாரிப்பு நிறுவனம் ரி டிவீட் செய்துள்ளது. இதன் மூலம் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியில் ஆல் டைம் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் டங்கல் படத்தின் வசூலை கேஜிஎஃப் 2 தாண்டி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வெளியாகி நான்காவது வாரத்திலும் இந்த படம் வசூலில் அடிவாங்காமல் சென்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கேஜிஎஃப் 2 முன்பாக பாகுபலி 2 திரைப்படம் மட்டுமே இந்தியில் அதிக வசூல் செய்துள்ளது.