செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (22:43 IST)

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் லைகாவுக்குத்தான். அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் தற்போது 'மெர்சல்' படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் என்பது அனைவரும் அறிந்ததே



 
 
இந்த நிலையில் இந்த படத்தை தயாரிப்பது லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனமா? அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனமா? என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை இல்லை
 
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் 'ஸ்பைடர்' படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் இப்போதைக்கு ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் லைகாவிற்கே என்பது உறுதியாகிவிட்டது.