புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2019 (18:02 IST)

சந்தானத்துடன் டிக்கிலோனா விளையாடும் ஹர்பஜன் சிங்!

தமிழ் சினிமாவில் காமெடிய நடிகராக அறிமுகமாகி கிடு கிடுவென வளர்ந்து வரும் சந்தானம் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து மார்க்கெட்டை இழந்துவிட்டார். மேலும் பரோட்டா சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் அவரது இடத்தை நிரப்பி ரசிகர்களின் ஃபேமஸ் காமெடியன்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். 


 
இந்நிலையில் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக சந்தானம் விடா முயற்சியுடன் இருந்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த A1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவிற்கு வசூலும் பெற்றது. அதையடுத்து தற்போது டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் யோகி  இயக்கம் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் " என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனத்திற்கு நன்றி. #தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே.உங்களால் வெள்ளித்திரையில்.இந்த  வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் என தெரிவித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவிற்கு என்ரி கொடுக்கும் ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்துக்கூறி வரவேற்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.