திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (14:00 IST)

டகால்டிக்குப் பின் டிக்கிலோனா – கவுண்டமணியின் வசனத்தை தலைப்பாக வைத்த சந்தானம் !

சந்தானம் தனது அடுத்த படத்துக்கு டிக்கிலோனா எனப் பெயர் சூட்டியுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருந்த நடிகர் சந்தானம் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த 'தில்லுக்கு துட்டு- 2' மற்றும் 'ஏ1' ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் 'ஓடி ஓடி உழைக்கணும்', 'டகால்டி', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் சந்தானம் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஸ்வாசம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று மிகப்பெரிய லாபம் பெற்ற கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சந்தானம் முதன்முறையாக ஹீரோ, காமெடியன் மற்றும் வில்லன் ஆகிய  மூன்று வேடங்களில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த படத்தின் தலைப்பு டிக்கிலோனா என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கவுண்டமணியின் காமெடி பஞ்சான டகால்டியை தலைப்பாக வைத்திருந்த சந்தானம் இப்போது மற்றொரு பிரபலமான பஞ்சான டிக்கிலோனாவை தனது படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.