1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 28 டிசம்பர் 2018 (12:07 IST)

இரண்டு சிங்கங்களை தில்லாக எதிர்த்து நின்ற சௌந்தரராஜா

கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் சௌந்தரராஜா.



சுந்தர பாண்டியன் தொடங்கி  வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக  வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜாவின் நடிப்பைப்பார்த்து பலரும் பாராட்டுகின்றனர். இரண்டு சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியவரே என ரசிகர்கள் இவரை ஏகத்துக்கும் புகழ்கிறார்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் சௌந்தரராஜா.