வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (10:49 IST)

பட ஷூட்டிங் ரத்து! வயநாடு புறப்பட்ட மலையாள திரை உலகம்! - மீட்பு பணிகளில் இறங்கும் நடிகர், நடிகைகள்!

Wayanad Landslide

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகியுள்ள நிலையில் மலையாள நடிகர்கள், நடிகைகள் பலரும் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு மீட்பு பணிகளில் உதவ சென்றுள்ளனர்.

 

 

கனமழையால் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்காக நாடு முழுவதும் இருந்து உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மலையாள சினிமா நட்சத்திரங்களும் களம் இறங்கியுள்ளனர். நடிகை நிகிலா விமல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்புடன் இணைந்து வயநாட்டில் நிவாரண பணிகளில் பணியாற்றி வருகிறார்.

 

கருடன் பட வில்லன் நடிகர் உன்னி முகுந்தன், நடிகை மஞ்சு வாரியர், ஷான் நிகம் உள்ளிட்ட பலர் மீட்பு பணிகள், நிவாரண பணிகளுக்கு களத்தில் இறங்கி செயல்பட விருப்பமுள்ளவர்கள் தங்களுடன் இணையலாம் என சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர். பிரபல நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகளை தங்கள் ரசிகர்கள் மூலமாக செய்து வருகின்றனர். வயநாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் மலையாள சினிமா உலகமே முழுமூச்சாக ஈடுபட்டுள்ளது.

 

Edit by Prasanth.K