1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (14:53 IST)

வயநாடு நிலச்சரிவு.. சூர்யா, ஜோதிகா, கார்த்தி வழங்கிய நிவாரண தொகை இத்தனை லட்சமா?

வயநாடு நிலச்சரிவால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு நேற்று நடிகர் சூர்யா, இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி தரப்பில் ஒரு மிகப்பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மூன்று மலை கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்திருப்பதாகவும் இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட  உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
 
ஏற்கனவே நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் சில கிரையுலக பிரமுகர்கள் கேரளா நிவாரண நிதியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran