செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (14:14 IST)

சூரி வீட்டுக்கு சென்ற விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்: என்ன காரணம்?

நடிகர் சூரி வீட்டில் நடந்த விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பிரபல காமெடி நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. மதுரையில்  சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதா மற்றும் ராம் பிரசாத் ஆகியோருக்கு திருமணம் நடந்தது இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் கருணாஸ் புகழ் தங்கதுரை சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 
 
மேலும் பல திரையுலக பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் அண்ணன் மகள் திருமணத்தில் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய பிரபல நடிகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திருமணத்திற்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் தற்போது சூரி, அண்ணாத்த, டான் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகி என்பது குறிப்பிடத்தக்கது